விருத்தாசலம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் கடலூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
அகத்தியர் வழிபட்ட தலம். சுந்தரர் தன் மனைவி பரவையாருக்காகப் இறைவனிடம் பொன் வேண்டிப் பெற்று இங்குள்ள மணிமுத்தாறு நதியில் போட்டு இறைவன் அருளால் அவற்றை திருவாரூர் கோயில் குளத்தில் எடுத்தார். இத்தலத்தில் இறக்கும் உயிர்களின் வலது காதில் சிவபெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்தருளுகிறார் என்பது ஐதீகம். |